2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நியமனம் உறுதி என ஆளுநர் வாக்குறுதி

George   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகம் முன்பாக வடமாகாண தொண்டர்கள் ஆசிரியர்கள், புதன்கிழமை (28) நடாத்திய போராட்டம் ஆளுநரின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி, வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பாக நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது ஆளுநரினால் இவ்வாண்டுக்குள் நியமனத்தினைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களை, மாலை 5 மணியளவில் சந்தித்த ஆளுநர், எதிர்வரும் 04ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் நிலையில் நிரந்தர நியமனத்தினை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X