2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நேர அட்டவணை பரிசீலனை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 08 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன், சண்முகம் தவசீலன்

வடமாகாணத்தில் சேவையாற்றும் அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சபைகளுக்கிடையில் தயாரிக்கப்பட்ட நேர அட்டவணையில் பரிசீலனை செய்து திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல், வடமாகாண வீதி அபிவிருத்தி மாகாண பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றது.

நேர அட்டவணையில் இணக்கப்பாடு இல்லாமையினால் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய சேவையினர் மற்றும் தனியார் பஸ் சேவையினர் ஆகியோருக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு சண்டைகளும் இடம்பெற்றன. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர். 

இதனையடுத்து, வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், மத்திய போக்குவரத்துச் அமைச்சின் அனுசரணையுடன் இரண்டு தரப்பினருக்கான நேர அட்டவணையை கடந்த ஒக்டோபர் மாதம் தயாரித்து நவம்பர் மாதத்திலிருந்து அதனை நடைமுறைப்படுத்தினர். தனியார் துறையினருக்கு 60 சதவீத வாய்ப்புக்களும், போக்குவரத்துச் சபையினருக்கு 40 வீதமான வாய்ப்புக்களும் வழங்கப்பட்டு நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட நேர அட்டவணையை திருத்தங்கள் மேற்கொள்வதை பரிசீலிக்கும் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், வடமாகாண போக்குவரத்து அமைச்சர், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் மாவட்ட செயலக பிரதம கணக்காளர்கள், இலங்கை போக்குவரத்து ஆணையத்தின் வடக்கு இணைப்பாளர், இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர், வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் ஒன்றியத்தின் தலைவர், இலங்கை போக்குவரத்து சபையின் ஐந்து மாவட்டங்களின் சாலை முகாமையாளர்கள், ஐந்து மாவட்டங்களினதும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .