2025 ஜூலை 19, சனிக்கிழமை

நீர்வழங்கலை மேற்கொள்ளுமாறு மனு கையளிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, புதுமுறிப்பு குளத்தின் கீழான நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், எதிர்வரும் சிறுபோக நெற்செய்கைக் காலத்தில் நீர்வரி இடாப்பில் பதிவு செய்யாத காணிகளை பதிவுசெய்து சிறுபோக நெற் செய்கைக்கான நீர் வழங்கலை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி நீர்ப்பாசனப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு திங்கட்கிழமை (04) மனு கையளித்துள்ளனர்.

தற்போது இக்குளத்தின் 7 அடி நீரே நெற்செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டு 900 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. குளத்தின் நீர்மட்டம் தற்போது 19 அடியாகக் காணப்படுகின்றது.

நீர்வரி இடாப்பு பதிவுகளின் ஊடாக நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்தப்படுமானால் இக் குளத்தின் நீரை முழுமையாகப் பயன்படுத்தி இரண்டாயிரம் வரையான ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளமுடியும் என கையளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X