2025 மே 14, புதன்கிழமை

பகிடிவதைக் குற்றச்சாட்டு; மாணவனின் வீட்டில் தாக்குதல்

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவனின் வீட்டில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்று இரவு  10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரில் முதலாவதாக இடைக்காலத் தடை அறிவிப்பு வழங்கப்பட்ட மாணவனின் வீடே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .