2025 மே 21, புதன்கிழமை

‘படகைக் கொண்டு உறவை முறிக்க முடியாது’

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

இந்திய இழுவைப்படகு விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, இந்தியாவைப் பகைத்துக்கொள்ள முடியாதென, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு, நேற்று (21) விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர், யாழ்ப்பாண மாவட்டக் கடற்றொழில் சங்கத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது, மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கத்தினர், தமது பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததோடு, மக​ஜரொன்றையும் கையளித்தனர்.

இதையடுத்து, கடற்றொழிலாளர் சங்கத்தினரின் கோரிக்கைகளைச் செவிமடுத்த அமைச்சர், அவற்றுக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இந்தியச் செலவாணியைப் பெற்றுத்தரும் கடலட்டைத் தொழில் வளர்ச்சியடைய வேண்டுமெனவும் அத்தொழிலை எமக்குச் சாதகமான முறையில் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மீனவச் சமூகத்தினருக்கு, பாரிய பிணக்குகள் இருக்கின்றதைத் தாங்கள் மறுக்கவில்லையெனவும் அந்தப் பிணக்குகளை, ஒரே நேரத்தில் தீர்த்துவைக்க முடியாதெனவும் கூறிய அமைச்சர், அதனால், அனைத்து மீனவச் சங்கத்தினரையும் அழைத்து, கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு ஏற்றவகையில், முதலாவதாக, யாழ்ப்பாண மாவட்டத்தைத் தெரிவுசெய்துள்ளதாகக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .