Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்
பட்டப்பகலில் இந்திய துணைத்தூதரக அதிகாரியின் வீட்டை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளனவென யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
யாழ். நாவலர் வீதி குறுக்கு வீதியில் நேற்று (11) பகல் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாரி, காலை 8.30 மணியளவில் கடமைக்குச் சென்று மாலை 6.30 மணியளவில் வீட்டுக்குத் திரும்புவது வழமை. வழமை போன்று நேற்றுக் காலையும் வீட்டைப் பூட்டி விட்டுச் சென்று மாலை வரும் போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டுக் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதன்போது, வீட்டிலிருந்த பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
59 minute ago