2025 ஜூலை 19, சனிக்கிழமை

பட்டாசுக் கொழுத்தி வீசியவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 ஜனவரி 05 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மது அருந்திவிட்டு, பட்டாசுகளை கொழுத்தி வீதியில் சென்றவர்கள் மீது வீசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் பாசையூர் பகுதியில் கடந்த நத்தார் தினத்தன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி இரவு, மதுபோதையில் நின்ற குறித்த நபர், வீதியால் சென்றவர்கள் மீது பட்டாசுகளை கொழுத்தி போட்டுள்ளார். இதனை தட்டிக்கேட்டோரை தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார், பிரதான சந்தேக நபர் என கருதப்படும் இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்ட பின்னர், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, வழக்கை விசாரித்த நீதவான் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X