Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 19 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜெகநாதன்
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வடமராட்சி கல்வி வலயங்களுக்கு இதுவரையில் நிரந்தர பணிப்பாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இன்று (19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு ஏற்பட்ட வெற்றிடமானது மாதக்கணக்கில் செல்லுகின்றது. அதேபோன்று வடமராட்சிக் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வுபெற்றுவிட்டார். இந்நிலையில் ஒரு நிறுவனத்தில் இருந்து ஓய்வுபெறுபவர் மூன்று மாதங்களுக்கு முன்னரே ஓய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறெனில் அந்த இடங்களுக்கான வெற்றிடத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே ஒருவரை நியமனம் செய்வதுக்கான தீர்மானம் எடுத்துவிடவேண்டும். ஆனால் மேற்குறித்த இரண்டு வலயங்களுக்கும் பணிப்பாளர்களை நியமிப்பதில் இன்னும் மர்மம் நீடிக்கின்றது. யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு பணிப்பாளரை நியமனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றமும் தெளிவான கட்டளையை வழங்கியுள்ளது. ஆனால் இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை. அதேவேளை மடு கல்வி வலயத்திற்கும் மன்னார் கல்வி வலயத்திற்கும் பணிப்பாளர்கள் உடனடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெருக்கடியாகவும், மாணவர் தொகை, பாடசாலைகளின் தொகை அதிகமாகவும் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் வடமராட்சிக் கல்வி வலயங்களுக்கு இன்னும் பணிப்பாளர்களை நியமனம் செய்யாமை வேதனையான விடயம் என்பதுக்கு அப்பால் மர்மமாகவே உள்ளது. இந்த நியமனங்களை உடன் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம். அதன் பின்னரும் எதுவும் நடைபெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .