2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘பதற்றம் காரணமாகவே பொறுப்பற்ற விதத்தில் பேசி வருகின்றார்’

Editorial   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

“அரசியல் பரப்பில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகவே சிறிகாந்தா பொறுப்பற்ற விதத்தில் பேசி வருகின்றார்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறிகாந்தா ஒரு மூத்த அரசியல்வாதி. சிரேஸ்ட சட்டத்தரணி என்பது மட்டுமல்லாமல் நீண்ட அரசியல் அனுபவங்களைக் கொண்டவர். ஆனால் அவர்களுக்கு அரசியல் பரப்பில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகவே பொறுப்பற்ற விதமாக பேசி வருகின்றார்.

தமிழ் மக்கள் எல்லோரையும் அடி முட்டாள் என்று நினைத்துக் கொண்டே, தமிழ் மக்கள் நலனடிப்படையில் செயற்படுவதுக்கு எல்லோரும் இணைய வேண்டுமென கோருகின்றார்.

அவர்  கூட்டமைப்பின் பங்காளிகளில் ஒன்றான ரெலோ அமைப்பைச் சார்ந்தவர். அவரின் கட்சியும் நாடாளுமன்றில் அங்கத்துவம்; பெற்றுள்ளது. அரசியல் யாப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் அவர் அங்கம் வகிக்கும் கூட்டமைப்புத்தான், பௌத்தத்துக்கு முன்னுரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை, ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு தமிழர்களை படுகுழிக்குள் தள்ளுவது போன்ற ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த நேரத்தில் நாங்களும் அவர்களுடன் சேர்ந்து இந்த இனத்தை படுகுழிக்குள் வீழ்த்த வேண்டும் என்றா, அவர் அழைப்பு விடுக்கின்றார்.

இதேவேளை, இரகசிய வாக்கெடுப்பைக் கோருவது ஜனநாயக உரிமைதான். இவர்களுக்கு வசதியான போது இரகசிய வாக்கெடுப்பென்றும், வசதியில்லாத போது நாகரீகமல்ல என்றும் கூறுவது தங்கள் அரசியல் நலன்களுக்காகவே தான்.

நாம் யாழ். மாநகர சபையில் எங்கள் கட்சி சார்பில் ஒருவரை பிரேரிக்க உள்ளோம். மாநகர சபையில் ஆட்சிமைப்பதுக்கு யாரிடமும் ஆதரவு கோருவதில்லை என்ற நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக இருக்கின்றோம். எனவே ஈ.பி.டி.பி யிடமோ அல்லது கூட்டமைப்பிடமோ எமக்கு ஆதரவை வழங்குமாறு நாம் கோரவில்லை என்பதுடன் இனிமேலும் கோரப் போதில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .