2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பராமரிப்பின்றி காணப்படும் மயானம்

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி இந்து மயானம் உரிய பராமரிப்புகளின்றி காணப்படுவதாக, குற்றம் சாட்டப்படுகின்றது.

அதேவேளை, இது தொடர்பில் பிரதேச சபை விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென, பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

திருநெல்வேலி - பாற்பண்ணை பகுதயில் அமைந்துள்ள திருநெல்வேலி இந்து மாயனத்தை சுற்றி சுற்றுமதில் கட்டப்பட்டு, மதிலின் மேல் முட்கம்பி வேலிகள் அடிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை சேதமாக்கி விஷமிகள் உள்நுழைவதுடன், மயானத்தின் வாசல் கதவுக்குப் போடப்படும் பூட்டை உடைந்தும் உள்நுழைந்து விஷமிகள் மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த நீர் குழாய்களை உடைத்து சேதமாக்கியுள்ளனர்.

அத்துடன் மின் இணைப்புகளையும் சேதமாக்கியுள்ளனர். இது தொடர்பில் பிரதேச சபை விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென, பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, எரி மேடை மற்றும் எரி கொட்டைகைகள் (சடலம் எரியூட்டப்படும் இடம்) என்பவற்றையும் புனரமைப்பு செய்ய வேண்டுமெனவும், பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X