2025 மே 01, வியாழக்கிழமை

பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தக நிலையத்துக்கு பூட்டு

Niroshini   / 2021 ஜனவரி 09 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் நகர் நடைபாதை அங்காடியில், பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தக நிலையம் ஒன்று, இன்று> யாழ். மாநகர சுகாதார பிரிவினரால் பூட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கு கடமையாற்றும் 3 ஊழியர்களும் குடும்பத்துடன் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் நகர நடைபாதை அங்காடி வர்த்தகர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அங்குள்ள வர்த்தக நிலையமொன்றில் உள்ளவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காதன் காரணமாக, இன்றைய தினம், அவர்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .