2025 மே 03, சனிக்கிழமை

பழையமுறிகண்டி - கோட்டைக்கட்டியகுளம் வீதி துப்புரவு

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - பழையமுறிகண்டி கிராமத்தில் இருந்து கோட்டைக்கட்டியகுளம் கிராமத்துக்குச் செல்லும் வீதியின் இருபுறமும் துப்புரவு செய்யப்படவுள்ளதாக, துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன் தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், பழையமுறிகண்டிக் கிராமத்தில் இருந்து கோட்டைக்கட்டியகுளம் வரை மூன்று கிலோ மீற்றர் வீதியின் இரு புறமும் பற்றைகள் வளர்ந்துள்ளன என்றார்.

 வீதிக்கு அருகில் பற்றைகள் வளர்ந்து காணப்படுவதன் காரணமாக, யானைகளை வீதியில் வருகின்ற மக்கள் இலகுவில் காண முடியாத நிலைமையால் யானைகளால் மக்கள் தாக்கப்படும் அபாயம் இவ்வீதியில் காணப்படுவதாகவும், அவர் கூறினார்.

வீதியின் சில இடங்களில் பெருங் குழிகள் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், குறித்த வீதி பிரதேச சபைக்குரியதெனவும் குறித்த இந்நிலையில், வீதியின் இரு புறத்தையும் துப்புரவு செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்று, வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில், வேலைகள் முடிக்கப்பட வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, "பழையமுறிகண்டி கிராமத்தில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது. குளத்தின் கீழ்ப் பகுதியில் பொதுக் கிணறு ஒன்று நன்னீர் ஊற்றுகளுடன் காணப்படுவதால் குறித்த கிணற்றை இறைத்து துப்புரவு செய்து மக்கள் பாவனைக்கு ஒப்படைப்பதற்கான வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்பட உள்ளது. பழையமுறிகண்டி கிராமத்தில் 40 குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன" எனவும், சற்குணநாதன் சுயன்சன் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X