Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்தன்
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்ட பெண் மற்றும் அவர் இறப்பதற்கு முன்னர் அவரால் கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகள் ஆகியோரின் இறுதிச் சடங்குகள், இன்று (29) இடம்பெற்றன.
அரியாலையில் உள்ள அவர்களது வீட்டில் காலை 11 மணியளவில் இறுதி சடங்குகள் இடம்பெற்றன.
இதைத் தொடர்ந்து, செம்மணி இந்து மயானத்தில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் சடலங்கள், அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
11.7 மில்லியன் ரூபாய் பணத்தை, நெருக்கமான நண்பருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்து விட்டு, ஏமாற்றம் அடைந்த காரணத்தால், குறித்த பெண்ணின் கணவர், முதலில் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த பெண் மன உளைச்சலுக்குள்ளாகி இருந்த காரணத்தாலும், கணவரின் பிரிவைத் தாங்க முடியாத நிலையில் தனது 3 பிள்ளைகளுக்கும் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தானும் விஷம் பருகி கடந்த வௌ்ளிக்கிழமை உயிரிழந்திருந்தார்.
இதன்போது தனது மரணத்துக்கு காரணம் என, சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கும் குடும்பத்தாருக்கும், கடிதம் ஒன்றை எழுதிக் வைத்திருந்தார். பணக் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், பிஞ்சுக் குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே பலியாகியதால், யாழ்ப்பாணம் முழுதும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago