2025 மே 21, புதன்கிழமை

‘புத்தரின் போதனைளை தமிழில் கூறுங்கள்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.மதுசங்க

வடக்கில் உள்ள மக்களுக்கு, புத்தபெருமான் போதித்த போதனைகளை, தேரர்கள் தமிழில் மொழிப்பெயர்த்துக் கூற வேண்டுமென வலிறுத்திய வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அப்போதுதான் இப்பிரதேச மக்கள் அதனை புரிந்து கொள்வார்களெனவும் வேற்றுமை உணர்வு ஏற்படாதெனவும் தெரிவித்தார்.

காங்கேசன்துறை - தையிலிட்டி திஸ்ஸ விகாரையை புனரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று முன்தினம் (22) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

இந்த விகாரை ஒரு தனிப்பட்ட விகாரையாக இருக்க முடியாதெனத் தெரிவித்ததுடன், இந்த விகாரை, யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர்துடைக்கும் ஸ்தலமாகவும் சமாதானம், நல்லிணக்கச் செய்திகளை இங்குள்ள மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் ஸ்தலமாகவும் அமைய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இப்பிரதேசத்தில் உள்ள பிக்குகள், இங்குள்ள மக்களுடனும் ஏனைய சமயத் தலைமைகளுடனும் அமைப்புகளுடனும் சினேகபூர்வமாக இருந்து கொண்டு, நல்லிணகத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .