2025 மே 21, புதன்கிழமை

புலம்பெயர் மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நடமாடும் சேவை

Editorial   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.றொசேரியன் லெம்பேட்

புலம்பெயர்ந்து நாடு திரும்பிய மக்களுக்கு, தூதரகப் பிறப்புச் சான்றிதழ், குடியுரிமைச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுவதற்கான நடமாடும் சேவை, மன்னார் நகர மண்டபத்தின் கலாசார மண்டபத்தில், இன்று (12) காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது.

மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், இந்த நடமாடும் சேவை நடைபெறுகிறது.

இச்சேவை, இன்றுக் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதுடன். அத்துடன், நாளையும் (13) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையும் குறித்த சேவைகள் இடம்பெறவுள்ளன.

மன்னார் மாவட்ட செயலாளர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் ஆரம்பமான குறித்த நடமாடும் சேவையில், மன்னார்,நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய 5 பிரதேச செயலகப் பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலகர்கள், திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புலம்பெயர்ந்து சென்று மீண்டும் நாடு திரும்பி, மன்னார் மாவட்டத்தில் வசித்து வரும் மக்கள், குறித்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .