Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஸ் மதுசங்க
தமிழீழ விடுதலைப் புலிகளால், மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டுகள் 11, யாழ்ப்பாணத்தில் இரண்டு இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளனவென யாழ்ப்பாணம் பொலிஸின், விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து, கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல்களை அடுத்து, இவை மீடக்கப்பட்டுள்ளன.
நெல்லியடி, துன்னாலை கிழக்கு பிரதேசத்திலிருந்து ஐந்து மோட்டார் குண்டுகளும், ஊர்காவற்றுறையிலுள்ள காட்டுப்பகுதியில் குழிக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆறு மோட்டார் குண்டுகளுமே, சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவானின் கட்டளைக்கு அமைய, அந்த மோட்டார் குண்டுகள் செயலிழக்கச்செய்யப்படும் என்றும் விசேட அதிரடிப்படை பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
45 minute ago
2 hours ago