Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, அதனை தற்போது அகற்றியுள்ளனர்.
கோவில் திருவிழாவை முன்னிட்டு, இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய, கோவிலுக்கு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில், பொலிஸாரின் இந்தச் சோதனை நடவடிக்கைகளால் கோவிலுக்குச் செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக, வடக்கு ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதையடுத்து, பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்களை கோவில் சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இதற்கமைய நல்லூர்க் கந்தனின் பத்தாம் திருவிழாவான நேற்று வியாழக்கிழமை புதிய ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன
அவை நகைகள், ஊசிகள் என சிறு உலோகங்களுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்புவதால், அவற்றை இன்றைய தினம் காலை மீண்டும் எடுத்து சென்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
1 hours ago
3 hours ago