2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 18 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் நேற்று (17) கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அதன் போது உரும்பிராய் சந்தியில் உள்ள உணவகத்தில் உணவு வாங்குவதற்கு இளைஞர் ஒருவர் தலைக்கவசம் இன்றி வந்துள்ளார். குறித்த இளைஞனை அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸார் மறித்து தலைக்கவசம் இன்றி வந்தமைக்கு தண்டம் எழுத முற்பட்டு உள்ளார்.

அதன் போது குறித்த இளைஞன் தனக்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செல்வாக்கு உள்ளதாகவும், அங்கே தன்னை பற்றி கேட்டால் அங்குள்ள பொலிஸார் கூறுவார்கள், நீங்கள் புதிதாக கடமைக்கு வந்துள்ளதால் தன்னை பற்றி தெரியாது, தண்டம் எழுத முனைகின்றீர்கள் என கடமையில் நின்ற இரு பொலிஸாருடனும் முரண்பட்டு உள்ளார்.

இதனால் பொலிஸாருக்கும் இளைஞனுக்கும் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து அவ்விடத்தில் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளனர். அதனால் அங்கு கடமையில் நின்ற பொலிஸார் மேலதிக பொலிஸாரை வரவழைத்து, இளைஞனை கைது செய்ததுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X