Editorial / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்.நகர் - ஸ்டான்லி வீதி பகுதியில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் முகமாக யாழ். பிரதேச செயலாளர், யாழ்.மாநகர சபை ஆணையாளருடன் களத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
ஸ்டான்லி வீதியில் கடும் வாகன நெரிசல்கள் காணப்படுவதனால் பொதுமக்கள் போக்குவரத்தின் போது இடையூறுகளை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசல்களை குறைப்பது தொடர்பில் யாழ்.மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலனுடன் களத்துக்குச் சென்று பிரதேச செயலர் ச. சுதர்சன் நிலைமைகளை ஆராய்ந்தார்.
இதன்போது ஸ்டான்லி வீதியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் தமது விற்பனை பொருள்களை வீதி யோரங்களில் காட்சிப்படுத்தி வைப்பதனாலும் வீதியோரங்களில் வாகனத்தை நிறுத்த முடியாமல் வீதிகளில் சாரதிகள் வாகனத்தை நிறுத்தி வைப்பதனாலும் பெரும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
அதனால் வீதியோரங்களில் பொருள்களை காட்சிப்படுத்தும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் வீதியோரங்களில் பொருள்களைக் காட்சிப்படுத்தினால் மாநகர சபை அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வீதியில் குறியீடுகள் மற்றும் வீதியோரங்கள், வீதியின் மத்தியில் வெள்ளை கோடுகள் வரைவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், வீதி ஒழுங்களையும் வாகன தரிப்பிட ஒழுங்குகளையும் போக்குவரத்து பொலிஸார் கண்காணிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago