2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

போதையில் குழந்தையைத் தூக்கி வீசியவருக்கு மறியல்

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்

ஊர்காவற்றுறை - சின்னமாடு, மூன்றாம் வட்டாரப் பகுதியில், போதையில் குழந்தையைத் தூக்கி வீசிய நபர் ஒருவரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம், இன்று (02) உத்தரவிட்டது.

தனது உறவினர் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற நபர் ஒருவர், அங்கு உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கியுள்ளார். அதை அவதானித்த உறவினர்கள், குறித்த நபரை ஏசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர், குழந்தையைத் தூக்கி வீசியுள்ளார்.

இதனால் காயமடைந்த குழந்தை, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய நபர், ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .