2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

போராட்டக்காரர் தீக்குளிக்க முயற்சி

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இன்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

மேலும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறவுள்ள சுகாதாரத் தொண்டர்கள் மாற்று வழியில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களும் உள்ளே செல்ல முற்பட்டமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .