2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘போராளிகள் கட்சியினருக்கு அச்சுறுத்தல்’

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் 

“ஜனநாயக போராளிகள் கட்சியினரை விசாரணை என்ற பெயரில் நான்காம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கதக்கது. அவ்வாறான செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்” என இலங்கை தமிழரசு கட்சியின் துணை பொது செயலாளரும், வடமாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (16) அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்,“ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசியை எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் ஒருமுறை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடைப்பிரிவு கோரியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக போராளிகள் கட்சி ஆரம்பிக்கப்பட முன்னரும் அதற்குப் பின்னரும் விசாரனைக்கு உட்பட்டவர். அண்மைக் காலத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் வேந்தன் மற்றும் அதன் தலைவர் கதிர் ஆகியோரும் பயங்கரவாத தடைப்பிரிவினரால் விசாரணைக்கு உட்பட்டிருக்கின்றனர்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் மூன்று பிரதானிகளையும் குறிவைத்து விசாரணைக்குட்படுத்துவது அவர்களை அச்சுறுத்தி, அவர்களது ஜனநாயக நீரோட்ட இணைவை இல்லாதொழிப்பதை நோக்கமாக கொண்டதாகவே பார்க்கப்படவேண்டும்.

இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் போராளிகளாக இருந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தமது கட்சியை ஆரம்பித்து வெளிப்படையாக செயல்படுகின்றவர்கள். இக் கட்சியின் உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் ஆகும்.

இவர்களை இப்படி அச்சுறுத்துவது அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதலை தடுக்கும் செயற்பாடாகவே காணப்படுகின்றது.

தொடர்ந்தும் முன்னாள் போராளிகளை விசாரனை என்ற பெயரில் நான்காம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கதக்கது. உடனடியாக அரசாங்கம் இவ்வாறன செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்” என  குறிப்பிடப்பட்டு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .