Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
நடராசா கிருஸ்ணகுமார் / 2018 ஜூலை 17 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - அக்கராயன் பிரதேசத்தில் நடமாடுகின்ற போலி வைத்தியரொருவர் தொடர்பில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, அக்கராயன் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த நபர், அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் வைத்தியராகப் பணியாற்றாத நிலையில், அந்த வைத்தியசாலையில் தான் பணியாற்றுவதாகக் கூறி, கிராம மக்களிடம் பணம் அறவிடுதல் உள்ளிட்ட பல மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக, கிளிநொச்சி மாவட்டப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரிடமும், அக்கராயன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .