2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பெண்களுக்கான தேசிய செயலகம் திறப்பு

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கணவனை இழந்த பெண்களின் மேம்பாட்டுக்கான தேசிய நிலையம்,  கிளிநொச்சி நீதிமன்றத்துக்கு அருகில் வெள்ளிக்கிழமை (13) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ஜெயசிங்க முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு நிலையத்தைத் திறந்து வைத்தார்.

பொறுப்புள்ள அரசாங்காமாகவுள்ள இந்த அரசாங்கம், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்ற வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய இந்த செயலகம் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .