2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக வாபஸ் மீண்டும் தொடரலாம் என்றும் எச்சரிக்

Menaka Mookandi   / 2017 ஜனவரி 10 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கடந்த 20 நாட்களுக்கு மேலாக வடமாகாண பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வந்த காலவரையாற்ற பணிப்பகிஸ்கரிப்பு, திங்கட்கிழமை, தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தலைவர் கே.சதீஸ், தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,

வடமாகண சுகாதார அமைச்சின் செயலாளருடன் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்தையின் அடிப்படையில், எட்டப்பட்ட சுமூகமான தீர்வினை அடுத்து, கடந்த 1ஆம் திகதியில் இருந்து அமுலாக்கப்படவிருந்த இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், கொழும்பு பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரின் அறிவுறுத்தலுக்கு அமைய திங்கட்கிழமை காலையில் இருந்து பணிப்புறக்கணிப்பை கைவிட்டு கடமைக்கு பூரணமாக திரும்பியுள்ளோம்.

சுகாதார அமைச்சின் அலுவலகத்தில்  4ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர், சுகாதார அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலில் சில முரண்பாடுகள் காணப்படுவதாக சங்கத்தலைவர் சுட்டிக்காட்டினார்.

இடமாற்ற கொள்ளையினை நிறுத்தினால் அதற்கு பதிலாக புதிய இடமாற்ற கொள்கை தயாரிக்கப்பட்டு அதன் பின்னர் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும் என  அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இடமாற்ற இரத்து தொடர்பான கடிதத்தில், புதிய இடமாற்ற விண்ணப்பங்கள் 20.01.2017 வரை ஏற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனை பொதுச்சுகாதார சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

 5ஆவது விடயத்தில் கூறப்பட்ட 20.01.2017 க்கு முன்னர் இடமாற்ற கொள்கையில் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் , 6ஆவது விடயத்தில் 20.01.2017ஆம் திகதி தொடக்கம் 30-01-2017ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் வருடாந்த இடமாற்ற கொள்கையில் சீர் செய்வது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்துடன் கலந்துரையாடப்படும்.

20ஆம் திகதிக்குள் புதிய இடமாற்ற கொள்கை கொடுக்கப்படவேண்டும். 20ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடையில் இடமாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நடத்தல்வேண்டும். அதன் பின்னர் தயாரிக்கப்பட்ட இடமாற்ற கொள்கையுடன் விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டும்.

20ஆம் திகதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டால், சுற்றுநிருபத்தின் கொள்கை இல்லாமல் ஒருவர் விண்ணபிக்கமுடியும் என நாம் கேட்கின்றோம் என தலைவர் தெரிவித்தார்.

எனவே இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் 01-03க்கு அமைவாக தொழில் சங்க நடவடிக்கைக்கு செல்கிறோம். இடமாற்ற கொள்கை தயாரிக்கப்படுவதில் எதாவது குழப்ப நிலை ஏற்படுமாக இருந்தால் மீண்டும் எந்தவித அறவிப்பும் இன்றி வேலை நிறுத்தப்போராட்டம் இடம்பெறும்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X