Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
போயா தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உரும்பிராய் சந்தையிலுள்ள மாட்டிறைச்சிக் கடைக்குள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 கிலோகிராம் ஆட்டு இறைச்சி மற்றும் 12 கிலோகிராம் மாட்டிறைச்சி என்பவற்றைக் கைப்பற்றியதுடன், இருவரைக் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இருவரும் கோண்டாவில் மற்றும் சுன்னாகம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.
அனுமதி பெற்று வந்து இயங்கி வரும் இம்மாட்டிறைச்சி கடையில் போயா தினங்களில் இவ்வாறான சட்டவிரோமான விற்பனை இடம்பெற்று வருவதாக சந்தை வியாபாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறான சம்பவங்களுக்கு கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று (27) உரும்பிராய் சந்தைக்கு சென்ற பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் இவ்விருவரையும் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .