Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2017 ஜனவரி 06 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை 189பேர் விண்ணப்பித்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின்; திட்டத்துக்கு, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு, இவ்வீடு பொருந்தாது எனவும் ஒரு வீடு அமைக்க செலவு செய்யும் 2.1 மில்லியன் ரூபாயில் 2 அல்லது 3 கல் வீடுகளை அமைக்க முடியும். பொருத்து வீட்டுக்கான காலம் 30 வருடங்களே எனத் தெரிவிக்கப்பட்டு, பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
வடமாகாண முதலமைச்சர், வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இத்திட்டத்தை நிராகரித்ததுடன் வடமாகாண சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியின் கவனத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பொருத்து வீடு வேண்டாம் என போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசாங்கம் தொடர்ச்சியாக பொருத்து வீட்டுத்திட்டத்தை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு விண்ணப்பங்களையும் கோரியுள்ளது. இந்நிலையில், பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழிலிருந்து இதுவரை 189 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
13 minute ago
24 minute ago
29 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
29 minute ago
30 minute ago