Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியற் பீடங்களுக்கான கட்டடத்தொகுதிகளை அமைப்பதற்கான அடிக்கல்லை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா வெள்ளிக்கிழமை (11) நாட்டினார்.
விவசாய பீடத்துக்கான திறன்விருத்தி கட்டடத் தொகுதியும், பொறியியற் பீடத்துக்கு மெக்கானிக்கல் பிரிவுக்கான கட்டடத் தொகுதியும் தலா 300 மில்லியன் ரூபாய் செலவில் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ளன.
யாழ்.இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன், வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, யாழ்;ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago