Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 16 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ், எம்.றொசாந்த், நிதர்சன் வினோத்
யாழ்ப்பாணம் - கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் தி. பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“எதிர்வரும் 17ஆம் திகதி முதல், கல்கிசையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன் துறைக்கு ஒரு இரவு நகர் சேர் கடுகதி புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபட உள்ளது.
இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கல்கிசையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அங்கிருந்து வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்பட்டு அம்பலங்கோட, பொல்காவலை, குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தை 5.25க்கு வந்தடைந்து, அங்கிருந்து 5.30 க்கு புறப்பட்டு கோண்டாவில், சுன்னாகம், காங்கேசந்துறையை சென்றடையும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு சுன்னாகம், கோண்டாவில் ஊடாக 10.25க்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கிளிநொச்சி, வவுனியா, அநுராதபுரம், குருநாகல், கொழும்பு, கம்ப ஹா, மருதானையை சென்றடைந்து அங்கிருந்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளையை சென்றடையவுள்ளது.
ஒரு வழி கட்டணமாக நகர் சேர் கடுகதிக்குரிய கட்டணமாக 2,800 ரூபாய் அறவிடப்படவுள்ளது.
இதற்கான முன்பதிவுகள் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திலும் ஏனைய முன்பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய புகையிரத நிலையங்களிலும் நீங்கள் மேற்கொள்ளலாம். இன்றைய காலக்கட்டத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்.” என்றார். (R)
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago