Janu / 2024 மே 27 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்துள்ளதாகவும் , திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ,
" யாழ்ப்பாண நகர் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் கடந்த சில மாதங்களில் 32 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. அவை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விசாரணைகளின் போது , திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே உதிரிபாகங்களாக பிரித்து விற்பனையில் ஈடுபடுகின்றனர்.அதானல் மோட்டார் சைக்கிள்களை மீட்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். " என தெரிவித்துள்ளனர் .
மேலும் , மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, அவற்றுக்கு "ஹாண்டில் லொக்" போட்டு செல்லுமாறும் , மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எம். றொசாந்த்
3 minute ago
31 minute ago
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
31 minute ago
13 May 2026
13 May 2026