Janu / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலும்,நிர்ணய விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய திங்கட்கிழமை (09) மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை (10) முதல் அமுல்படுத்தப்படும்.
இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) உதவி மாவட்ட செயலாளர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் ,வருமான வரி பரிசோதகர் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாட்டிறைச்சி குத்தகை கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபை பிரிவுகளிலும் செவ்வாய்க்கிழமை (10) முதல் நிர்ணய விலையில் விற்பனை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக 1 கிலோ கிராம் தனி இறைச்சி 2,200 ரூபாய்க்கும் , 1 கிலோ கிராம் முள் இறைச்சி 2,000 ரூபாய்க்கும் அதில் (200 கிராம் முள்ளும் 800 கிராம் இறைச்சியும்) 1 கிலோ கிராம் தனி முள்ளு 1,200 ரூபாய்க்கும்,. 1 கிலோ கிராம் ஈரல் 2,500 ரூபாய் க்கும் விற்பனை செய்வதற்கு மாவட்ட செயலாளர் , தவிசாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களின் முன்னிலையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் இறைச்சி கடை உரிமையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் தீர்வுக்கு கொண்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
ரொசேரியன் லெம்பட்

27 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago