2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மடு சென்று திரும்பிய பஸ் விபத்து: 24 பேர் காயம்

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், மடு பிரதேசத்திலிருந்து முழங்காவில் ஊடாக, யாழ்ப்பாணம் சென்ற பஸ் ஒன்று, இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில், சுமார் 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூநகரி, மண்டைக்கள்ளாறு, நாளாவெளி பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி பஸ், கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மடு திருத்தலத்தலத்துக்கு யாத்திரை சென்று திரும்பியவர்களே, இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள், பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X