2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மணப்பெண்ணை கடத்தி விடுவிப்பு: சந்தேகத்தில் மூவர் கைது

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

உடுப்பிட்டி இமையாணன் பகுதியிலிருந்து திங்கட்கிழமை (14) இரவு கடத்தப்பட்ட மணப்பெண், செவ்வாய்க்கிழமை (15) இரவு கொண்டு வந்து விடப்பட்டதாகவும், கடத்தலுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கனடாவிலிருந்து வருகை தந்த 28 வயதுடைய யுவதிக்கு சிறுப்பிட்டியைச் சேர்ந்த இளைஞனுடன் இன்று வியாழக்கிழமை (17), திருமணம் நடைபெறுவதாகவிருந்தது. இந்நிலையில், வான் ஒன்றில் முகமூடி அணிந்தவாறு திங்கட்கிழமை (14) இரவு வந்த கும்பலொன்று, வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு மணப்பெண்ணைக் கடத்திச் சென்றனர்.

அயலவர்கள் வானைக் துரத்திச் சென்றபோதும், குறித்த வான் உடுப்பிட்ட வழியாக வரணி பகுதிக்குச் சென்று மறைந்தது. இது தொடர்பில் யுவதியின் உறவினர்கள், வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடத்தப்பட்ட குறித்த பெண்ணை கடத்தியவர்கள் செவ்வாய்க்கிழமை (15) இரவு கொண்டு வந்து விட்டுள்ளனர்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்;து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .