2025 மே 19, திங்கட்கிழமை

மணிவண்ணனின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 21 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளுராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என தெரிவிக்கப்பட்டு மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில், மனு மீதான விசாரணை நிறைவடைந்து கட்டளையிடும்வரை யாழ்ப்பாண மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க தடைவிதித்து உறுப்பினர் வி.மணிவண்ணனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியது.

இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த மனு இன்று (21) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போதே மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X