Freelancer / 2023 மார்ச் 08 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - பூநகரியில் இயங்குகின்ற மதுபானசாலைக்கும் முழங்காவிலில் திறக்க உள்ள மதுபானசாலைக்கும் அனுமதிகள் பெறப்படவில்லை எனத் தெரிவித்து, குறித்த மதுபானசாலையுடன் தொடர்புடையவர்களுக்கு புநகரி பிரதேச சபையின் தவிசாளரால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
“பூநகரி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மட்டுவில் நாடு மேற்கு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் ஏ-32 சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள மதுபானசாலை வியாபாரம் மேற்கொள்கின்றமைக்கு எமது பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை.
“எமது பிரதேச சபையின் அனுமதியுடனேயே இவ்வாறான வியாபார நடவடிக்கை செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
“குறித்த மது விற்பனை நிலையம் அமைந்துள்ள பகுதி பொதுமக்களுக்கு இடையுறாக காணப்படுவதுடன், மருத்துவமனையில் இருந்து குறுகிய தூரத்தில் காணப்படுவதால், பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் சமூக ஆர்வலர்கள் தகவல் வழங்கி உள்ளனர்.
“எனவே, குறித்த வியாபார நடவடிக்கையை சபையின் அனுமதியுடன் மேற்கொள்வதுடன், தற்போது வியாபார நடவடிக்கை மேற்கொள்ளும் இடம் பொதுமக்களுக்கு இடையூறாக காணப்படுவதனால், குறித்த வியாபார நிலையத்தை பொருத்தமான இடத்துக்கு மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
“2022ஆம் ஆண்டு எமது சபையினால் தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் உணவு விற்பனைக்கான அனுமதிப்பத்திரம் என்பதை தங்கள் கவனத்தில்கொண்டு வர விரும்புகின்றேன்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முழங்காவில் நகரத்தில் மது விற்பனை நிலையம் திறப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள உரிமையாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், குறித்த மது விற்பனை நிலையம் திறக்கும் இடம் பொருத்தமற்ற இடம். எனவே, இடத்தை மாற்றுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழங்காவில் நகரத்தில் திறக்கவுள்ள மது விற்பனை நிலையத்துக்கு அருகில் ஆலயம், விளையாட்டு மைதானம், மக்கள் செறிந்து வாழும் இடங்கள் காணப்படுகின்றன.
இந்த இரு மது விற்பனை நிலையங்களும் பொருத்தமற்ற இடங்களில் அமைந்துள்ளதாக தவிசாளரின் கடிதங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. (N)
14 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
58 minute ago
1 hours ago