எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறைக்குச் செல்வதுக்காக பஸ்ஸில் இருந்த பெண்ணின் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு, ஒருவர் ஓடித் தப்ப முயன்றுள்ளார்.
இதன்போது குறித்த நபரை துரத்திச் சென்ற பொதுமக்கள் வெலிங்டன் சந்தியில் மடக்கிப் பிடித்து, பஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து கட்டிவைத்து நயப்புடைக்கப்பட்டார்.
அத்துடன், பெண்ணிடம் அபகரித்த தாலிக்கொடியும் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (06) ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago