Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 03 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
“தேர்தல் பரப்புரைக் காலங்களில் மனநோயாளிகளுக்குப் பதிலளிப்பதுக்கு நாம் விரும்பவில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல் என நினைக்கின்றோம்” என, யாழ்.மாநகர சபை முதல்வர் வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில், நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“நீதிமன்றில் வழக்கை முன்னெடுப்பது தொடர்பில் பொலிஸாரே அறிவிக்க முடியும். அவர்கள் ஆதாரங்கள், சாட்சியங்களை வைத்து வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா, இல்லையா? என்று தெரிவிக்க பொலிஸாருக்கு முழுச் சுதந்திரம் உண்டு. பாதிக்கப்பட்ட நபரோ அல்லது முறைப்பாட்டாளரோ நீதிமன்றில் தமது விடயங்களைக் கதைப்பதற்கு அனுமதியில்லை.
“யாரும் விரும்பியபடி வந்து கருத்துத் தெரிவிக்க இது சந்தையில்லை. இது நீதிமன்றம். நீதிமன்றின் மான்பைத் தெரியாதவர்களை நீதிமன்றை அவமதிப்பவர்களை பொறுப்புவாய்ந்த பதவியில் வைத்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
“தங்களுடைய தனிப்பட்ட பாதிப்புக்காக மதவாதத்தையும் சாதியத்தையும் தூண்டிவிடுவதில் கல்விமான்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் செயற்படுவது வேதனையான விடயம்.
“மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட விவகாரம் நீதிமன்றில் சரியாகவே அனுகப்பட்டது.
“ஆதாரங்களும் இல்லாமல், குற்றச்செயலும் நடக்காமல் எங்களை மாத்திரம் துரத்தித் துரத்தி எங்களுடைய பரப்புரையை முடக்குகின்றார். எங்களைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டு வருகிறார். எம்மைக் காவலி என்று பேசுகின்ற அவர் யார்? என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு நபர். நீதிமன்ற பிடியாணைக்கு மதிப்பளிக்காது தப்பி ஓடி 5 ஆண்டுகள் வனவாசம் செய்துவிட்டு வந்த நபர் மற்றவர்களைக் குறை கூறுகின்றார்.
“தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் மீது விசாரணை நடத்த முடியாது எனக் கூறுபவருக்கு எதிராக எத்தனை வழக்குகள் போடப்படுகின்றன என, தேர்தல் முடிவடைந்த பின்னர் அறிவீர்கள்” எனத் தெரிவித்தார்.
14 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
1 hours ago