2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மனித புதைகுழியை பார்வையிட்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் இருவர்  இன்று (11) பார்வையிட்டனர்.

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 115 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (11) சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தற்போது வரை 266 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அகழ்வு பணியை நேரடியாக பார்வையிட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை (11) மனித எலும்புக்கூடுகள் அகழ்வு இடம்பெறும் பகுதிக்குச் சென்று நேரடியாக அகழ்வு பணிகளை அவதானித்ததோடு, குறித்த மனித எலும்புக்கூடுகளின் அகழ்வு மற்றும் ஏனைய விபரங்களை அகழ்வுப்பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.

இதன்போது, போது புலனாய்வுத்துறையினர் பலர் குறித்த பகுதியை சூழ்ந்து கொண்டதோடு, கையடக்கத்தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .