Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
George / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
காணாமற்போனவர்கள் இறந்துவிட்டதாக மரணச் சான்றிதழ் பெற்றிருந்தாலும், காணாமற்போன உறவுகள் உயிருடன் இருப்பதாக உறவினர்கள் உணர்ந்தால் ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்க முடியும் என காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.
காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்டவர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றது.
இதன்போது, கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த துரைராசா மகேஸ்வரி என்பவர் சாட்சியமளித்தார்.
'எனது மகன் துரைராசா சிவகுமார் (காணாமற்போகும் போது வயது 21) கடந்த 1996 ஆம் ஆண்டு யாழ். நகரப்பகுதியில் வைத்து காணாமற்போனார். மகன் காணாமற்போனமை தொடர்பில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார், சி.ஐ.டி (பயங்கரவாதத் தடுப்புப் விசாரணை பிரிவினர்) உள்ளிட்ட பலர் என்னிடம் விசாரணைகள் மேற்கொண்டனர். எனது மகன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், எனது மகன் இறந்துவிட்டார் என்று எனக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டது' என்றார்.
இதன்போது, குறுக்கிட்ட பரணகம, உங்கள் மகன் உயிருடன் இருக்கின்றார் என்பதை நம்புகின்றீர்களா? அல்லது மரணச்சான்றிதழை ஏற்கின்றீர்களா எனக்கேட்டார்.
அதற்கு, தனது மகன் உயிருடன் இருப்பதை நம்புவதாகவும், மரணச் சான்றிதழ் கட்டாயமாகத் தரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மரணச் சான்றிதழ் பெற்றிருந்தாலும், ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதற்கு அனுமதியுண்டு. இந்த விசாரணைக்குழு நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் இயங்குகின்றது. அமர்வுகள் முடிவடைந்த பின்னர், சாட்சியமளித்தவர்களிடம் இரகசியமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அதற்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என பரணகம கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago