Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 15 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியாவில் இதுவரை 6,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வீதியோரங்களில் நாட்டி, அதனை பராமரித்து, மேலும் மரங்களை தொடர்ச்சியாக நாட்டிவரும் மருதம் பசுமை இயக்கம் பசுமைப்பரட்சியை ஏற்படுத்தி வருகின்றது.
2016ஆம் ஆண்டு, ஈச்சங்குளம் கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக இருந்த வே.தனபாலசிங்கத்தின் சிந்தனையில், கிராம அபிவிருத்தி சங்கத்தால் வீதியோரங்களில் மரங்களை நடும் செயற்றிட்டம் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்தை கிராம மட்டத்தில் மட்டுப்படுத்தாது மாவட்டம் சார்ந்து விஸ்தரிக்க வேண்டும் என “மருதம் பசுமை இயக்கம்” என்ற அமைப்பை உருவாக்கி, அதனூடாக 2020ஆம் அண்டளவில் யாழ். நோக்கிய மரநடுகை திட்டத்தை 14 கிலோமீற்றருக்கு மரங்களை நட்டு தற்போது பராமரித்து வருகின்றனர்.
பணிப்பாளர் சபை மற்றும் நிர்வாக கட்டமைப்பை கொண்டு செயற்பட ஆரம்பித்த மருதம் பசுமை இயக்கம், இன்று தாண்டிக்குளத்தில் இருந்து மாந்தை வரையான மரநடுகை திட்டத்தையும் இவ் ஆண்டு ஆரம்பித்துள்ள நிலையில், யாழ். நோக்கி மர நடுகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தையும் எதிர்வரும் மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளனர்.
பல நன்கொடையாளர்கள் இவர்களுக்கு சரீர மற்றும் பொருள் உதவிகளை வழங்கியிருந்தபோதிலும் தொடர்ச்சியாக மரங்களை பராமரிப்பதற்கு ஏதுவான நிதிவசதியை திரட்டிக்கொள்வதில் மருதம் பசுமை இயக்கம் பெரும் இடையூறுகளை சந்தித்து வருவதாக இதன் தலைவர் வே.தனபாலசிங்கம் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, ஒரு மரத்தை 3 வருடங்கள் பராமரிக்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கும் பசுமை இயக்கத்தின் தலைவர், ஒரு மரத்துக்கு 1,800 ரூபாய் செலவாகுவதாகவும் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு வழங்குவதிலும் பின்னிற்கின்றமை பெரும் துர்ப்பாக்கியமாக கருதுவதாகவும் மரங்களின் முக்கியத்துவம் தொடர்பாக எமது பிரதேச மக்களுக்கு தெளிவூட்டப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (N)
15 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
58 minute ago
1 hours ago