Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றரை மாத சிசு கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு , சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தலையில் பலமாக தாக்கப்பட்டதில் சிசு யாழில் உயிரிழந்துள்ளது.
அளவெட்டி பகுதியை சேர்ந்த சசி ரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத சிசுவே உயிரிழந்துள்ளது.
சிசுவுக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக குழந்தையின் தாய் சிசுவை அளவெட்டி வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (03)கொண்டு சென்றுள்ளார்.
குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது உயிரிழந்துள்ளது.
சிசுவின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , உட்கூற்று பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை (04) முன்னெடுக்கப்பட்ட வேளை,ன் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை , தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை , காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள் உள்ளிட்டவற்றுடன் , உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது.
சிசுவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிசுவின் தந்தை வெளியூரில் தங்கி இருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலையே சிசு இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தெல்லிப்பளை பொலிஸார் சிசுவின் தாயாரை பொலிஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எம்.றொசாந்த்
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
56 minute ago
1 hours ago