2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மலேசியாவுக்கு அனுப்புவதாக பண மோசடி

Menaka Mookandi   / 2014 ஜூலை 22 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், ற.றஜீவன்

மலேசியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 5 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவை மோசடி செய்ததாக நல்லூரைச் சேர்ந்த சந்தேகநபரொருவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பண மோசடியில் ஈடுபட்டவர், நல்லூர் பின்வீதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வந்தவரெனவும் இவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யோகேஸ்வரன் மயூரன் (வயது 28) என்ற இந்த சந்தேகநபருக்கு எதிராக வியாபாரிமூலை மற்றும் தொண்டமனாறுப் பகுதிகளைச் சேர்ந்தஇரு இளைஞர்கள் நேற்று திங்கட்கிழமை (21) மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடிக் குற்ற ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்களை மலேசியாவுக்கு அனுப்புவதாகக் கூறியே இவ்வாறு பண மோசடி செய்துள்ளதாக முறைப்பாட்டாளர்கள் முறைப்பாட்டில் தெரிவித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .