2026 மே 02, சனிக்கிழமை

மாணவனின் உயிரைப் பறித்த Online விளையாட்டு

Janu   / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவன் புதன்கிழமை (29) அன்று  அதிகாலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். இவரைத் தவிர இவரது வீட்டில் உள்ள ஏனையோர் விசேட தேவையுடையவர்கள் என  தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், அலைபேசி விளையாட்டிற்கு (Online Game) அடிமையான நிலையில் இருந்த இந்த மாணவன், புதன்கிழமை (29)  அதிகாலை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்படும்போது, வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவனின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .