Editorial / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
யாழ் மாநகரசபையில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கான விவாதம் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுக்கான விசேட கூட்டம் இன்று (29) யாழ் மாநகரசபையில் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றது.
வரவு செலவுத்திட்டத்துக்கான முன்மொழிவை முதல்வர் சபையில் சமர்ப்பித்த போது,
மாநகரசபை கட்டளைச்சட்டத்துக்கு அமைவாக வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கான ஒருவார முன்னறிவித்தல் வழங்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட முன்மொழிவையே சபையில் முன்மொழிய முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர் இ.கிருபாகரன் தெரிவித்தார்.
குறித்த கருத்து தொடர்பில் சாதக பாதக நிலையை விவாதித்த சபை, எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் உத்தேச வரவு செலவுத்திட்டத்தை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பது எனவும் பொதுமக்களின் முன்மொழிவுகளுடன் கூடிய திருத்திய வரைபை எதிர்வரும் 7 ஆம் திகதி சபை அமர்வில் சமர்ப்பிப்பதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
1 ஆம் திகதி முதல் யாழ் மாவட்டச்செயலகம், யாழ் மாநகரசபை, யாழ் பொது நூலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
15 minute ago
23 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
23 minute ago
40 minute ago