Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 12 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
'தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் சிலருக்கு தேர்தல் பிராசார கூட்டத்தை நடத்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தை வழங்கியமை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளை மீறும் செயற்பாடு' என, அந்த ஆலயத்தின் குருக்களுக்கு, மல்லாகம் நீதிமன்றால் எடுத்துரைக்கப்பட்டது.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களில் நடத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோர முன்னரே, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியப் பேரவை என்ற தேர்தல் கூட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அது தொடர்பான செய்திகள், ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு கவனத்தில் எடுத்தது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளை, அந்தக் கட்சி மீறிவிட்டதாக ஆணைக்குழுவால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் ஆலய வளாகத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதித்த ஆலயக் குருக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தேர்தல்களுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவினரால் தெல்லிப்பளைப் பொலிஸாரின் ஊடாக மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவருக்கு தேர்தல் விதிமுறை தொடர்பில் உரிய கட்டளையை வழங்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு குருக்கள் இன்று அழைக்கப்பட்டார்.
அதனடிப்படையில் நீதிமன்றின் அறிவுரை குருக்களுக்கு இன்று வழங்கப்பட்டது. அத்துடன் இந்தக் குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணைகளிலிருந்தும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் விடுவிக்கப்பட்டார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago