Editorial / 2024 ஜூலை 15 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு திங்கட்கிழமை (15) காலை சென்ற வைத்தியர் அர்ச்சுனா, வைத்தியசாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு, பதில் வைத்திய அத்தியட்சகராக முன்னர் இருந்த இராமநாதன் அர்ச்சுனா வருகைதந்தமையால் குழப்பமான நிலை அங்கு ஏற்பட்டது.
வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் யார் வைத்திய அத்தியட்சகர் என இராமநாதன் அர்ச்சுனாவும் கோபால மூர்த்தி ரஜீவ்வும் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டநிலையில் பொலிஸார் தலையிட்டு சுமூகமான நிலையை ஏற்படுத்த முயன்றனர்.
இதனையடுத்து, சில மணிநேரங்கள் வைத்தியசாலை அலுவலக அறையில் சில கடமைகளில் ஈடுபட்டு விட்டு இராமநாதன் அர்ச்சுனா வெளியேறிச் சென்றார்.
இதேவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவ் தொடர்ந்தும் கடமையில் உள்ளார்.
தனக்கு உத்தியோகபூர்வமாக மத்திய சுகாதார அமைச்சில் இருந்து என்னை நீக்குவதற்கான கடிதம் வராத நிலையில், நானே சாவகச்சேரி வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் என தெரிவித்த இராமநாதன் அர்ச்சுனா, எனது விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை (14) நிறைவடைந்த நிலையில், கடமைக்கு மீண்டும் இன்று (திங்கட்கிழமை) வந்துள்ளேன் என்றார்.
12 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
55 minute ago
1 hours ago