Janu / 2025 ஜனவரி 07 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
குறித்த சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
இந்த நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்ற பின்னர் அங்கு இருந்த சோதனைச் சாவடிகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன.
இவ்வாறான நிலையில் திடீரென அகற்றப்பட்ட அந்த சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாற்றம் என்று கூறி புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அனுர அரசாங்கம் சோதனைச் சாவடிகளை தாமே அகற்றுவதும் மீண்டும் தாமே அமைக்கின்ற இந்த நடவடிக்கை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நிதர்ஷன் வினோத்


9 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
03 Feb 2026
03 Feb 2026