2025 மே 21, புதன்கிழமை

மீன்வாடிகள் தீக்கிரை: முரண்பாடு ஏற்படாதவாறு விசாரணை முன்னெடுப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில், மீன்வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து, முரண்பாடுகளைத் தோற்றுவிக்காத வகையில், முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாயாற்றுப் பகுதியில், நேற்று (13) இரவு, தமிழ்க் குடும்பங்களுக்குச் சொந்தமான எட்டு மீன்வாடிகள், இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டன.

இச்சம்பத்தைத் தொடர்ந்து, குறித்த பகுதியில், குழுக்களுக்கிடையில் இன முறுகல் ஏற்படுமென்பதைக் கருத்திற்கொண்டு, அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முரண்பாடுகளைத் தோற்றுவிக்காத வகையில், மேற்படி சம்பவம் குறித்தான விசாரணைகளை, நாயாறு கிராமிய கடற்றொழில் அமைப்பின் பொதுநோக்கு மண்டத்தில் வைத்து, முல்லைத்தீவு பொலிஸார், இன்று (14) காலை முதல் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .