Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 30 , மு.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், கடத்தல் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடும் அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் சுன்னாகம், மயிலங்காடு பகுதியில் நடப்பது தெரிய வந்துள்ளது.
மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், பணத்தை குறிப்பிட்ட திகதியில் தராவிட்டால், பணம் வாங்கியவரை கடத்திச் சென்று, சித்திரவதை செய்யும் அதிர்ச்சி சம்பவங்களும் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் பரவிய இரண்டு காணொளிகளில், ஒரே குழுவினால் இரண்டு வெவ்வேறு நபர்கள் அடித்து சித்திரவதைப்படுத்தப்படுவது பதிவாகியிருந்தது.
அவர்கள் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியிருப்பதும், குறிப்பிட்ட நாளில் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்படுவதும் காணொளி உரையாடலில் இருந்து தெரிய வருகிறது.
சுன்னாகம் மற்றும் மயிலங்காடு பகுதியை சேர்ந்த கும்பலே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளது.
காணொளியில் பதிவாகியுள்ள இரண்டு தாக்குதலாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நபர்கள், யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பதும், பணத்தை வசூலிக்க கடத்திச் சென்று சித்திரவதைப்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கும்பலை சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வாழைத்தோட்டம் அல்லது மயிலங்காடு மயானத்திற்கு ஆட்களை கடத்திச் சென்று அடித்து சித்திரவதைப்படுத்தி பணத்தை வசூலித்து வந்துள்ளனர்.
நீண்டகாலமாக நடக்கும் இந்த குற்றச்செயல் தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றக்கும்பலை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் உயர்மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
47 minute ago
51 minute ago
1 hours ago