Editorial / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
யுத்த சூழ்நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குற்பட்ட மாவட்டங்களில், மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு, சமுர்த்தி நலன்புரி உதவிகள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பாக குறித்த மாகாணங்களிலுள்ள மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்களுக்கு சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளரினால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி நலனுதவி வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான திட்டமிடலை மேற்கொள்ளும் பொருட்டு, பிரதேச செயலகப் பிரிவில், சமுர்த்தி நலனுதவி பெறுவதற்குத் தகுதியான மீள்குடியேறியுள்ள குடும்பங்கள் பற்றிய தகவல்களைப் பெற்று அனுப்புமாறு, சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அக்கடிதத்தில் கேட்டுள்ளார்.
இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், சமுர்த்தி நலனுதவி பெறுவதற்குத் தகுதியான மீள்குடியேறியுள்ள குடும்பங்கள் பற்றியத் தகவல்களைச் சேகரித்து அனுப்புமாறு, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.குணரெட்ணம், மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
பிரதேச செயலாளர் பிரிவு, குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை 4 அல்லது அதற்கு கூடிய குடும்பங்களின் எண்ணிக்கை, குடும்ப அங்கத்தவர் 3 பேரைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, குடும்ப அங்கத்தவர் 2 அல்லது அதற்கும் குறைவான குடும்பங்களின் எண்ணிக்கை, மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை போன்ற விபரங்களைப் பெற்று அனுப்புமாறு அக்கடிதத்தில் மேலும் கேட்டுள்ளார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025